தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார்.
இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் வாசித்தார். இந்த உரையில்,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தரப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாக அறிவித்துள்ளார். கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றம் செய்யப்படும். இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான நிதி ரூ.225.62 கோடியாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.