புதுச்சேரியில் 2022 ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று பேரவையின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வறுமை கோட்டிற்கு மேலும் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் முதியோர், விதவை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளும் பெற இதுவரை 15,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், எனவே அடுத்த மாதம் முதல் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் 100 வயது மேல் உள்ள முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.7,000 வழங்கப்படும் என்றும், 90 வயது முதல் 100 வயதிற்கு உள்ள முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3,500 ரூபாய் உதவித்தொகையை ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.