Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை அதிகமாயிருச்சு…. செய்வதறியாத திணறிய கோவில் பூசாரியின் முடிவு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் நரசிம்மசாமி தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவருக்கு கடன் சுமை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடனை எப்படி அடைப்பது என்று நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் நேற்று காலை மனைவியிடம் குளிக்க செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மனைவியும் மகள்களும் குளியல் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கிருந்த கொக்கி ஒன்றில் நாகராஜன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்ட மகள்களும் மனைவியும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நாகராஜனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |