காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பஜனை கோவில் வீதியில் காய்கறி வியாபாரியான செந்தில்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌசல்யா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் என்.சந்திராபுரம் ரோட்டில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் பின்புறம் இருக்கும் இடத்தில் செந்தில்குமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குடும்ப பிரச்சினை காரணமாக செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சனையில் விஷம் குடித்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.