கடன் பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் இவ்வாறு செய்தால் கடன் அடைபடும்..!
கடன் தொல்லை ரொம்பவே அதிகமாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் செவ்வாய்க் கிழமையும், சனிக்கிழமையும் குளிகை நேரம். அந்த நேரத்தில் கடனைத் தீர்த்தால் உங்களுடைய கடன் சீக்கிரமாக அடைந்துவிடும். அதுவும் உங்களுக்கு கடன் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் நீங்கள் வாங்கிய பணத்தை சிறுதொகையாக திருப்பிக் கொடுங்கள், அப்படி கொடுத்தால் சீக்கிரமாக அடைபடும்.
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் பார்த்து பகல் 12 மணியிலிருந்து 9 மணிவரை இருக்கும், அதே சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை இருக்கும். இந்த இரண்டு நாட்களும் இந்த நேரத்திற்குள் உங்களுடைய கடனை கொடுக்க பாருங்கள்.
நீங்கள் பெரிய தொகையை கடனாக வாங்கியிருந்தீர்கள் என்றால் ஒரு சிலர் கொஞ்சம், கொஞ்சமாக கடனை ஏற்றுக் கொள்வார்கள், அதாவது நீ கொஞ்சம் கொஞ்சம், கொடுத்தாலும் பரவாயில்லை எனக்கு என்னோட கடன் தொகையை கொடுத்து வந்தாலும் போதும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
நான் கொடுத்த தொகையை எனக்கு முழுமையாகத் கொடு, கொஞ்சம், கொஞ்சமாக எல்லாம் வேண்டாம் அப்படி என்றும் சொல்லுவார்கள். ரொம்ப பெரிய தொகை இருக்கும் பொழுது, சிறிய தொகையை வாங்க மறுப்பவர்களுக்கு நீங்கள் இப்படி ஒரு வழி செய்யுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமாகவே உங்கள் கடன் அடைபடும். உதாரணம் நீங்கள் ஒரு லட்சம் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு 10 ஆயிரம், 10 ஆயிரமாக கடன்தீர்க்கலாம் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் எனக்கு 50000 வேணாம், ஒரு லட்சம் மொத்தமாக கொடு என்று கேட்பார்கள.
அவ்வாறு இருக்கும் நிலைமையில் உங்களால் முழு கடனையும் அடைக்க முடியாமல் போய்விடலாம். அப்பொழுது இந்த பரிகாரத்தை செய்தால், உங்களுக்கு சீக்கிரமாவே கடன் அடைபடும்.
உங்க வீட்டில் சிவப்பு நிற உண்டியல் எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது சிவப்பு நிற ஒரு சிவப்பு நிறத் துணி எடுத்துக் கொள்ளுங்கள், காட்டன் துணி, பட்டு துணி அல்லது காட்டன் துணியில் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும். இந்த துணியை கொஞ்சம் பெரியதாக எடுத்துக்கொண்டு தினமும் அந்த குளிகை நேரத்தில் உங்கள் கையில் இருக்கக்கூடிய காசை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து வையுங்கள்.
நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று உங்கள் கையில் எவ்வளவு காசு இருக்கிறதோ அந்த காசை நீங்கள் சிவப்புத் துணியில் சேர்த்து வையுங்கள். அதாவது நீங்கள் கடன் கொடுக்கப் போகும் இந்த பணத்தை சேர்த்து வைக்கும்போது, இந்த சிவப்புத் துணியில் நீங்க போட்டு சேர்த்து வைக்க வேண்டும்.
அதுவும் உங்க கையில இருக்கும் பணத்தைஎவ்வாறு வைக்க வேண்டும். இந்த சிவப்பு துணியில் பணத்தை வைக்கும்பொழுது, கடன் வாங்கியிருக்கும் நபரின் பெயரை நீங்கள் சொல்லிகொண்டே வைக்க வேண்டும். அதுவும் குளிகை நேரத்தில் வைக்க வேண்டும்.
இப்படி உங்களால் முடிந்த அளவிற்கு தினமும் எவ்வளவு சேர்த்து வைக்க முடியுமோ, அந்த பணத்தை அதில் வைக்கும்பொழுது, பணம் சீக்கிரமாகவே சேர ஆரம்பிக்கும். ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும், அவர்களுக்கு கொடுக்கலாம். இப்படி செய்வதனால் ரொம்ப சீக்கிரமா உங்களுடைய முழு கடனையும் அடைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
தினமும் இப்படி செய்துவிட்டு துணியை மடித்து பீரோவில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் வையுங்கள். இதுபோல நீங்கள் செய்து கொண்டு வருவதினால் கண்டிப்பாக உங்களுடைய கடன் பிரச்சனை தீர ஆரம்பித்துவிடும். சீக்கிரமாகவே உங்களுடைய கடனை முழுமையாக அடைக்க ஆரம்பித்து விடுவீர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்த்து பயனடையுங்கள்.