Categories
தேசிய செய்திகள்

கடன் பெறுவோர் இறந்தால்?…. அடுத்து அதன் பொறுப்பு யாரை சேரும்?…. பலரும் அறியாத முக்கிய தகவல் இதோ…..!!!!

வங்கியில் இருந்து கடன் பெற்றால், அக்கடனுக்கான காலஅளவுக்குள் நாம் வாங்கிய கடன்தொகை முழுவதையும் வங்கிக்கு திருப்பிசெலுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும். இல்லையென்றால் வங்கியால் முழு அதிகாரத்துடன் கடன் வாங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனினும் கடன் வாங்கியவர் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்து விட்டால், அக்கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்று உங்களுக்குத் தெரியுமா..? இந்நிலையில் வங்கிகளினுடைய நடைமுறை என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

அதாவது, கடன் வகையையும், பிணையத்தினையும் பொறுத்தே, கடன்-ஐ திருப்பிச் செலுத்துவது யார் என தீர்மானிக்கப்படுகிறது. வீட்டுக்கடன் வாங்கியோர் இறந்து விட்டால், வங்கிகள் கூட்டாக கடன்வாங்கப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் சரிபார்க்கிறது. அத்துடன் இணைகடன் பெற்றவர் யாரெனும் இருக்கிறார்களா?. என்பதை வங்கியானது ஆராய்கிறது. அவ்வாறு இருப்பின் கடனை திருப்பிச்செலுத்தக்கூடிய பொறுப்பு அவர்மீது விழுகிறது.

இணையாக கடன் பெற்றவர் இல்லையெனில் (அல்லது) அவரால் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாவிட்டால் இறந்தவரின் சட்டப்பூர்வமான வாரிசு (அல்லது) உத்தரவாததாரரை வங்கிகள் தேடுகிறது. கடன் பெற்றவர் வீட்டுக்கடன் காப்பீட்டுத் தொகையினைப் பெற்று இருந்தால், க்ளைம் தொகையினை செலுத்தி நிலுவைத்தொகையை செலுத்தலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டு இருந்தால், க்ளைம் தொகையை நாமினியின் கணக்கில் போட்டு சட்டச்செயல்முறை நிறைவு செய்யப்படும். க்ளெயிம் தொகையிலிருந்து மட்டுமே நிலுவைத்தொகையை செலுத்த சட்டப்பூர்வ வாரிசுக்கு உரிமை உண்டு. வீட்டுக்கடனில் காப்பீடு இல்லை எனில், வங்கி தனது பணத்தை யாரிடம் இருந்தும் திரும்பப்பெற இயலாது. ஆனால் கடன்பெற்றவரின் சொத்தை கைப்பற்றி அதனை விற்று நிலுவைத்தொகையை வசூலிக்க முழு உரிமைஉண்டு.

கார் கடனுக்குரிய விதிகள் என்ன..?

கார் கடனை பொறுத்தவரையில் வங்கிகளானது குடும்பம் நபர்களை அணுகும் என்றும் கடன் வாங்கியோருக்கு சட்டப்பூர்வ வாரிசு இருந்து, அவர் காரை வைத்திருக்க விரும்பி நிலுவைத்தொகையை செலுத்தத் தயாராக இருந்தால் அவர் அதனை வைத்து நிலுவைத்தொகையை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் வங்கி காரை பறிமுதல் செய்து விற்று நிலுவைத்தொகையை வசூலிக்கும்.

தனி நபர் கடன் மற்றும் கிரெடிட்கார்டு கடன்களுக்குரிய விதிகள் என்ன..?

தனி நபர் மற்றும் கிரெடிட்கார்டு கடன்களுக்கு எவ்வகையான பிணையமும் இருப்பதில்லை. இதனால் பேங்குகள் சட்டப்பூர்வமான வாரிசுகள் (அல்லது) குடும்ப நபர்களிடம் இருந்து நிலுவைத்தொகையினை திரும்பப்பெற இயலாது. இணைக்கடன் பெறுபவர் இருந்தால் அவர் இந்த கடனை திருப்பிச் செலுத்தலாம். எனினும் இதனை செய்யத் தவறினால், வங்கி அதனை NPA ஆக அதாவது செயல்படாத சொத்தாக அறிவிக்கவேண்டும்.

Categories

Tech |