Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் பெற்று ரூ.1.41 கோடி மோசடி…. வங்கி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அமைந்துள்ளது. இங்கு சீனியர் வேளாளராக வெள்ளைச்சாமி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாலிகிராமத்தை சேர்ந்த சக்திவேல், தரகர் பொம்மையா என்பவரது உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் விவசாய கடன் பெற்றுள்ளார்m இதற்கு வெள்ளைச்சாமி உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாய கடன் பெற்று தொகையை மாற்று தேவைக்கு பயன்படுத்தியதால் 1 கோடியே 41 லட்சம் ரூபாய் வங்கிக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை சி.பி.ஐ நீதிமன்றம் வெள்ளைச்சாமி, சக்திவேல், பொம்மையா ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், சக்திவேலுக்கு 50 ஆயிரம் ரூபாய், பொம்மையாவுக்கு 20 ஆயிரம் ரூபாய், வெள்ளைச்சாமிக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Categories

Tech |