தமிழகத்திற்கு கடன் வாங்கியது தான் முதல்வர் பழனிசாமியின் சாதனை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கடனை ரூ.4.56லட்சம் கோடியாக அதிகரித்தது தான் முதல்வர் பழனிசாமியின் சாதனை என்ற திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கடன் வாங்கிய தொகையை கொண்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. என்எல்சி ரயில்வே போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.