Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய பெண்…. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை மிரட்டிய குற்றத்திற்காக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அன்னை தெரசா நகரில் சுப்புராஜ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஞ்சித், ரகுராம் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சென்னையில் பணிபுரிந்து வந்த சுப்புராஜ் அங்கு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரது சிகிச்சைக்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான சாந்தாராஜ் என்பவரிடமிருந்து வனிதா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அதன்பின் சிகிச்சை முடிந்ததும் சுப்புராஜ் வெளிநாட்டிற்கு பணிபுரிவதற்காக சென்றுவிட்டார். பின்னர் வனிதா தனது மாமியார் யசோதை மற்றும் 2 மகன்களுடன் கோவில்பட்டியிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இதனையடுத்து சாந்தாராஜிடம் வாங்கிய கடனுக்கு வனிதா மாதந்தோறும் வட்டி செலுத்திய நிலையில் சில தினங்களாக குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரால்  சரியாக பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாந்தாராஜ் கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் வனிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சாந்தாராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |