Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடன் வேண்டுமா?…. அதுவும் “குறைந்த வட்டி” விகிதத்தில்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரசீயர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் சிறு தொழில் கடன்கள், கறவை மாடுகள் கடன், கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், தனிநபர் கடன்கள் போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களை பெற 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இது குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படும்.

இதற்கு நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் கீழ் இருக்க வேண்டும். இதையடுத்து கிராமப்புற மக்களுக்கு 98,000 ரூபாய் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.இந்த கடன்களுக்கு குறைந்த அளவு வட்டி வழங்கப்படுகிறது. அதாவது கல்வி கடன்களுக்கு 3% வட்டியும், பெண்களுக்கு 4% வட்டியும், கைவினை கலைஞர்களுக்கு 5% வட்டியும், தனிநபர் கடன்களுக்கு 6% வட்டியும், சுய உதவிக் குழுக்களுக்கு 7% வட்டியும் பெறப்படுகிறது. இந்த கடன்களை பெறுவதற்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முகாம்கள் 23-ஆம் தேதி அகத்தீஸ்வரம் தாலுகாவிலும், 24-ஆம் தேதி தோவாளை தாலுகாவிலும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து 25- ஆம் தேதி கல்குளம் தாலுகாவிலும், 26-ஆம்‌ தேதி விளவங்கோடு தாலுகாவிலும், 28-ம் தேதி திருவட்டார் தாலுகாவிலும், 29-ஆம்‌ தேதி கில்லியூர் தாலுகாவிலும் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாம்களில் கலந்து கொள்ள வரும் நபர்கள் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு ஆதாரம் ஆகியவற்றை உடன் கொண்டு வரவேண்டும். எனவே இந்த முகாம்களில் அனைத்து சிறுபான்மையினர்  மக்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறியுள்ளார்.

Categories

Tech |