Categories
சென்னை தற்கொலை

கடன கட்டியாச்சு வட்டி கேட்டு தொல்லை பண்றாங்க…. ஓய்வூதியத்தை நிறுத்திட்டாங்க…. ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி….!!

பணிமனையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற நடத்துனர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

சென்னை ஆவடி திருமுல்லைவாயில்,திருவள்ளுவர் நகர் 4வது தெருவை சார்ந்தவர் தங்கமணி, இவர் ஆவடி பணிமனையில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி போக்குவரத்து கழக கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 4 மணி அளவில் பனிமலையில் உள்ள மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதை பார்த்த சக ஊழியர்களும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் அங்கு சென்று அவரை மீட்ட போது தங்கமணி மயங்கி விழுந்தார்.உடனே போலீசார் அவரை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

 

சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பிய நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்,அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளது .2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தங்கமணி 2009ஆம் ஆண்டு தனது மகன் ராகுலின் பொறியியல் படிப்பிற்காக வங்கியில் 2.25 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.வாங்கிய கடனை முறையாக திரும்பவும் அடைந்துள்ளார் ஆனால் வங்கியானது வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.அதோடு இரு மாதங்களாக தங்கமணியின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்ததுடன் அவரது  வங்கி கணக்கையும் முடக்கியுள்ளது.

 

இதைத்தொடர்ந்து தங்கமணி பலமுறை வங்கியில் உள்ள மேலாளரிடம் முறையிட்டார்.ஆனால் கல்விக்கடனை கட்டவில்லை என்று வங்கி தரப்பில் தெரிவிக்க பட்டது.இதைத் தொடர்ந்து நேற்றும் திருமுல்லைவாயலில் உள்ள வங்கிக்கு சென்று முறையிட்டுள்ளார் அப்போது அங்குள்ள அலுவலர்கள் கல்வி கடன் இன்னும் பாக்கி உள்ளது அத்தோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான தங்கமணி நேற்று நடந்த போராட்டத்திற்கு பின் தற்கொலை முயற்சி செய்துள்ளார்

Categories

Tech |