Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடமையிலிருந்து தவறிய ஆசிரியர்” மாவட்ட கல்வி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு…!!

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளியில் சவுந்தர்ராஜன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு சரிவர வராமல் இருந்துள்ளார். இவர் சக ஆசிரியர்களுடன் அரவணைத்து செல்லவில்லை. இவர் அரசின் உதவித் தொகையை மாணவர்களுக்கு பெற்று தராமல் இருந்துள்ளார்.

அந்த பள்ளியில் படிக்கும்  மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறையில் போதுமான அளவு இடவசதி இல்லை. இதன் காரணமாக புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்தை இன்று வரை தலைமை ஆசிரியர்  திறக்காமல் இருக்கிறார். இதன் காரணமாக தலைமைஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட கல்வி நிர்வாகம் தலைமை ஆசிரியரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

Categories

Tech |