Categories
மாநில செய்திகள்

கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து…. தேர்தல் ஆணையம் அதிரடி…. பரபரப்பு….!!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விதிகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Categories

Tech |