கடம்பூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருக்கும் போது கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடம்பூர் மலைப்பகுதியில் வாழும் குன்றி பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரின் மனைவி சிவகாமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவருடைய உறவினர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து செய்தியை தெரிவித்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வந்து இவரை ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது டி.என்.பாளையத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் சென்று கொண்டிருக்கும்போது சிவகாமிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் மருத்துவ உதவியாளராக இருந்த அஜித்குமார் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் சிவகாமிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகாமியும் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு தற்போது இருவரும் நலமாக இருக்கின்றார்களாம்.