தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவை இருந்தால் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். திருமணங்களில் சாப்பிடும்போது தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். விசேஷ நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தி கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.