Categories
மாநில செய்திகள்

கடற்கரைக்கு செல்ல அனுமதியளித்த முதல் நாளே…. இப்படியொரு சோகம்…!!!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் வசிப்பவர் ஸ்ரீதரின் மகன் சபரிநாதன். இவர் சென்னை தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார். நண்பர்கள் ஆறு பேரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் ஸ்ரீதர் உள்ளிட்ட 3மற்ற நண்பர்கள் அலையில் சிக்கியுள்ளனர். இதனால் மற்ற மூவரும் அவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் மூவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அலையில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரை திறந்த முதல் நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |