தாய்லந்தில் கடந்த ஆகஸ்ட் 18ம் திகதி, பேங்காக்கிலிருந்து கிழக்கே 100 கிமீ தொலைவில் உள்ள சோன்புரியின் பேங் சான் கடற்கரையில் பெண்ணின் நிர்வாண சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை மக்கள் அச்சமடைந்தனர். ஒரு நிர்வாணப் பெண் தலையை மறைத்தபடி சட்டையுடன் கரையில் இறந்து கிடந்தது போல் தோன்றியது. இதனையடுத்து அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் அவசர உதவி மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், முதற்கட்ட பரிசோதனையில் அது பாலியல் பொம்மை என்பதை உறுதி செய்தனர். ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அந்த பொம்மையின் விலை 469 பவுண்டுகள் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியது, உண்மையில் ஏதேனும் ஆற்றில் அதன் உரிமையாளர் பொம்மையை வீசியிருக்கலாம் எனவும், கடைசியில் கடலில் வந்து சேர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர். பொம்மையின் தலை அகற்றப்பட்ட நிலையில் இருந்தாலும், பொலிசார் அந்த பொம்மையை காவல் நிலையத்தில் பாதுகாக்க முடிவு செய்துள்ளதுடன், அதன் உண்மையான உரிமையாளர் உரிமை கோர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.