Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கடற்கரையில் குழந்தையை புதைத்து விளையாடிய தம்பதி… பாதுகாப்புத் துறையினர் எச்சரிப்பு..!!

கடற்கரையில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தையை மண்ணில் புதைத்து விளையாடியதால் பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி சீகேர்ஸ் ஓட்டல் அருகே கடற்கரையில் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் மிக உற்சாகமாக விளையாண்டு வந்தனர். அவர்கள் கடற்கரையில் பள்ளம் தோண்டி இடுப்பளவு குழந்தையை புதைத்து மண்ணைப் போட்டு மூடி விளையாடினர்.

அப்போது கடல் சீற்றமாக இருந்ததால் அலைகள் சீறிப்பாய்ந்து. இதனை கண்டு அந்த குழந்தை மிகவும் அஞ்சி அழுதது. அலைகளும் அருகே வந்து சென்றதால் குழந்தை மிகவும் பயந்தது. கடற்கரைப்பகுதியில் இது போன்ற விளையாட்டுகள் விபரீதத்தை ஏற்படுத்தும் என்று சம்பந்தப்பட்டவர்கள் எச்சரித்த போது அவர்கள் அங்கிருந்து சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் அவர்களை கடுமையாக கண்டித்தனர்.

Categories

Tech |