Categories
தேசிய செய்திகள்

கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட இளம் பெண்… கொலையாளி 4 வருடங்களுக்குப் பின் கைது… வெளியான பரபரப்பு பின்னணி…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்விந்தர் சிங் என்பவர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அந்த நாட்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் ராஜ்விந்தருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜ்விந்தர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது ராஜ்விந்தர் கையில் பழம் வெட்டும்  கத்தியுடன் குயின்ஸ்லாந்தின் கிரின்ஸ் நகரில் உள்ள வெங்ஹடி கடற்கரைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த கடற்கரைக்கு அதே பகுதியை சேர்ந்த மருந்தக ஊழியரான டயா கோர்டிங்க்லி(24) பெண்ணும் தனது நாயுடன் சென்றுள்ளார். அப்போது இருவரும் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது ராஜ்வீந்தரை பார்த்து டயாவின் நாய் குரைத்துள்ளது. இதனால்  ஆத்திரமடைந்த ராஜ்விந்தர், டயாவிடம் பிரச்சனையில் ஈடுபட்ட போது வாக்குவாதம் முற்றி தன்னுடைய கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு  டயாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் டயா  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து ராஜ்விந்தர்  டயாவின் உடலை கடற்கரை அருகே புதைத்து விட்டு நாயை மரத்தில் கட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து அவருடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவிற்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் டயா மாயமானது குறித்து போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியதை அடுத்து ராஜ்விந்தர், டயாவை கொலை செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி சென்றதை உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்டர்போல் உதவியுடன் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஆஸ்திரேலியா போலீசார் இந்தியாவிற்கு தப்பித்து வந்த ராஜ்விந்தர் பற்றி விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய போலீசார் ராஜ்விந்தரை கைது செய்து தங்களது நாட்டிற்கு அழைத்து செல்வதற்கு திட்டமிட்டு இந்திய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |