Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது”… மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை…!!!!!!!!

சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் நேற்று முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை இரு வேலைகளும் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபாரதமும்  விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மெரினா கடற்கரையில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி 18 கடை உரிமையாளர்களிடமிருந்து 1800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ம் தேதி வரை ஒரு வார காலத்தில் 2,548 உரிமையாளர்களிடமிருந்து 1,861 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒன்பது லட்சத்து 17,100 அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |