பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார். தற்போது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் ரம்யா பாண்டியன் தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ரம்யா பாண்டியன் கடற்கரையில் யோகா செய்தவாறு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.