பிக்பாஸ் பிரபலம் ரைசா கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இதையடுத்து நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை ரைசா டேஷ்டேக் லக், எஃப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Beach blessings 😍 pic.twitter.com/1Fqsbr5lcV
— Raiza (@raizawilson) March 23, 2021
மேலும் ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை நடிகை ரைசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.