சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்கிறது. ஒரு சில நேரத்தில் வெளுத்து வாங்கும் மழையால் நகரே தண்ணீர் சூழ்ந்து சிறு சிறு தீவுகள் போல காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் வெளுத்து வாங்கிய மழையால் நீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. இதனால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் இதில் குளித்து மகிழ்த்ததுடன் உற்சாகமாக படகு சவாரி செய்து வந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்கள் தடையை மீறி இவ்வாறு ஈடுபடுவது வேதனை அழித்தாலும் நோயின் பிடியில் தவித்து வரும் அவர்களுக்கு இது ஒரு சிறிய சுற்றுலாவாக உருவெடுத்துள்ளது.