Categories
தேசிய செய்திகள்

கடலாய் மாறிய தெருக்கள்…. பாகுபலி பட ஸ்டைலில் குழந்தை மீட்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ …!!

வெள்ள நீரில் சிக்கிய பச்சிளம் குழந்தை பாகுபலி பாணியில் பத்திரமாக மீட்கப்பட்டது.

கடந்த ஒரு வார காலமாக பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இரவு நேரத்தில் அதிகமாக மழை பெய்வதால் மழைத் தண்ணீர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் வீடுகளை சூழ்ந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியது அதிலும் ஒசகெரேஹள்ளி, மைசூர் சாலை, கோரமங்களா, பனசங்கரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனிடையே ஒசகெரேஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ஓடும் ராஜ கால்வாயில் வெள்ளம் உருவானது. இந்த வெள்ள தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து பொருட்கள் அனைத்தையும் அடித்துச் செல்ல மக்கள் அனைவரும் கடுமையான பசிக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே பச்சிளம் குழந்தை ஒன்று வெள்ளத்திலிருந்து பாகுபலி பாணியில் காப்பாற்றப்பட்டுள்ளது. அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |