Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. கரை ஒதுங்கிய வாலிபரின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வெங்கடேசன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ்(24), மனோஜ்(22) ஆகியோருடன் கடந்த 17-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென ராட்சத அலை வந்தது. இதனால் படகு கவிழ்ந்து 3 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதுகுறித்து அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மனோஜ் மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு மாயமான வெங்கடேசனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று மாலை வெங்கடேசனின் உடல் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |