கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் வடக்கு தீவில் கைதயா நகருக்கு அருகிலுள்ள கடலில் 10 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு புயல் காற்று வீசியதால் தன்நிலை தடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இந்த சம்பவத்தை அறிந்த கடலோர காவல் படையினர் மீட்புப் படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியும் மீட்புப்பணியை தொடர்ந்து உள்ளனர்.
இதனை அடுத்து பல மணி நேரத்திற்கு பின் மீட்புக்குழுவினர் 4 பேரை பிணமாக மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 5 மீனவர்கள் நீரில் தத்தளித்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் மட்டும் மாயமாகி உள்ளார். அவரைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை என மீட்புக்குழுவினர் கூறியுள்ளனர்.