கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே மேலக்குறும்பன் விளை பகுதியில் தேவதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர் கடலில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசிவிட்டு துறைமுகத்துக்கு வந்து சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு கையை கடல் நீரில் கழுவும் போது எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்து விட்டார்.
இது தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடலில் தவறி விழுந்த தேவதாசனை 2-வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் 2 நாட்கள் ஆகியும் மீனவருக்கு என்ன ஆனது என்று தெரியாததால் உறவினர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.