Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் நீந்தி செல்ல முயற்சி…. இலங்கை வாலிபர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கடலில் நீந்தி இலங்கைக்கு செல்ல முயன்ற வாலிபரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி முகுந்தராயர் கடற்கரை பகுதியில் கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் சம்பந்தன் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த சந்திரசேகர் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட், பணம் மற்றும் அவரது உடமைகள் அனைத்தும் தொலைந்துள்ளது. இதனால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக காவல்துறையினரிடம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எனவே ஓசூரில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த சந்திரசேகர், படகு மூலமாகவோ அல்லது கடலில் நீந்தியோ இலங்கைக்கு செல்ல முயன்றது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சந்திரசேகரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து கியூ பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |