Categories
உலக செய்திகள்

கடலில் புதைந்துள்ள ரசாயன ஆயுதங்கள்….. இயற்கைக்கு ஏற்படும் பேராபத்து….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கடலில் கிடக்கும் ரசாயன ஆயுதங்களால் பேராபத்து ஏற்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் நாஜிப் படைகளால் பால்டிக் கடலில் ஏராளமான ரசாயன ஆயுதங்கள் கொட்டப்பட்டது. அதன்படி சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்கள் கடலில் புதைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலந்தில் உள்ள ஒரு அறிவியல் அகாடமி ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வு தொடர்பான செய்திகள் போலந்து நாட்டின் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அதன்படி கடலில் கொட்டி கிடக்கும் டன் கணக்கிலான ரசாயனங்களால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ரசாயன ஆயுதங்களின் அளவை கணக்கிடுவது கடினம் என்றாலும், சுமார் ஒரு லட்சம் டன் வரை புதைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கன்னிவெடிகள், குண்டுகள் மற்றும் பீப்பாய்கள் போன்ற ஏராளமான ரசாயன பொருள்கள் கடலில் புதைந்துள்ளதால், இயற்கைக்கு பேராபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து வாயு வெடிகுண்டுகள் தண்ணீரை மாசுபடுத்துவதால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் போன்றவைகளை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |