மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே அமலிநகர் பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம், பால்ராஜ், பிரசாத் மற்றும் அஸ்வின் ஆகிய 4 பேரும் 1-ம் தேதி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சில மீனவர்கள் கடலில் தத்தளித்த நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகியோரை மீட்டனர்.
ஆனால் எவ்வளவு தெரியும் அஸ்வின் மற்றும் பிரசாத் ஆகிய 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக கடலோர காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி கடலோர காவல்துறையினர் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உள்ளூர் மீனவர்களும் படகில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.