பிரித்தானியா நாட்டின் கொடியிடப்பட்ட கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேக்க நாட்டின் தீவுகளில் மிலோசின் கடல் அமைந்துள்ளது. இந்த கடலில் பிரித்தானிய நாட்டின் கொடியிடப்பட்ட கப்பல் ஒன்று மூழ்கிக் கொண்டிருப்பதாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மூன்று கடற்படை கப்பல்கள், ஒரு தனியார் கப்பல், ஒரு கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் ஒரு விமானப்படை ஹெலிகாப்டர் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கப்பலில் இருந்த 17 பேரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் இந்தப் 17 பயணிகளும் கிரேக்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் மூன்று பேர் குழந்தைகள் ஆவார்கள் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் எப்படி கப்பல் மூழ்கியது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.