தண்ணீருக்கு அடியில் பாலம் எப்படி கட்டுகிறார்கள் என்பது குறித்த ஒரு விளக்கத்தை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
பொதுவாக கடலில் எப்படி பாலம் கட்டுகிறார்கள் தெரியுமா? நீருக்கு அடியில் சிமென்ட் மற்றும் மண்ணை கலந்து பாலம் கட்டும் போது தண்ணீரில் கரைந்து விடாதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். முதலில் பாலம் கட்டுவதற்கு முன்பாக ஒரு கண்டெய்னர் அளவிற்கு பெரிய தொட்டியை தயார் செய்து கப்பல் மூலமாக அதை கடலுக்கு அடியில் வைத்து விடுவார்கள்.
அதன் பிறகு அந்த கண்டெய்னரில் இருக்கும் தண்ணீரை வெளியே அகற்றிவிட்டு பாலம் கட்டுவதற்கான பணிகளை ஆரம்பிப்பர். இதன் காரணமாக மண், சிமெண்ட், கற்கள் போன்றவைகள் தண்ணீரில் கரையாமல் பாலம் கட்டுவது சாத்தியம் ஆகிறது.