Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்…. தவறி விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படைகள் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த வருன் காந்தி, சுப்ரமணி என்ற காட்டாண்டி போன்றவருடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மூன்று பேரும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  போது மீனவர் சுப்ரமணி எதிர்பாராத விதமாக கடல் தவறி விழுந்துள்ளார்.

இதில் அவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் சக மீனவர்கள் கடலில் வலை போட்டு சுப்பிரமணியன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |