ஆஸ்திரேலிய நாட்டில் கிறிஸ்துமஸ் தீவு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த தீவில் ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகிறது. பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான் நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டமாகும். எனவே சிவப்பு நிற நண்டுகள் இந்த மாதங்களில் காட்டுப் பகுதியில் இருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து செல்கின்றது. ஆண் நண்டுகள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி கடலுக்கு செல்கின்றது.
இந்திய பெருங்கடலுக்கு சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளை இட்டு, அந்த முட்டைகள் பொறித்ததும் குஞ்சுகளை கடற்கரைக்கு அழைத்து வந்து அங்கிருந்து தங்களது வீடான காட்டுப் பகுதிகளை நோக்கி செல்கின்றது. அந்த வகையில் லட்சக்கணக்கான குஞ்சுகள் முட்டைகளில் இருந்து வெளியே வந்த போதிலும் அவற்றில் அதிகமான குஞ்சுகள் மீன்கள் போன்ற கடல் உயிரினங்களுக்கு உணவாகி விடுவதால் அவை போக மீதமுள்ள நண்டுகள் தான் காடு பகுதிக்கு சென்றடைகின்றது. அதனால் தான் அரசு அலுவலர்கள் நண்டுகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நண்டுகள் பாதுகாப்பாக கடலுக்கு செல்வதற்காக பாதை அமைத்துள்ளனர்.