கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெலிங்டன் நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருருவாய் கிராமத்தில் உள்ளது. 29 அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர் தேக்கம் தொடர் மழை காரணமாக 27.50 அடி அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தின் வீடூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் வெள்ளமாக பாய்கிறது. இதையடுத்து புதுச்சேரியில் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை நடுப்பகுதி முழுமையாக உடைந்தது. அந்த வெள்ளத்தால் புதுச்சேரியில் செல்லிப்பட்டு_ பிள்ளையார்குப்பம் இடையே அமைந்துள்ள தடுப்பணையில் நடுப்பகுதி உடைந்துள்ளது.