கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளுக்கும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து 45 வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்களும் காலை 7 மணி முதல் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் உள்ள 42 வது வார்டு பகுதியை சேர்ந்த மங்கை மாரி என்ற 72 வயது மூதாட்டி தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அந்த மூதாட்டி அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி உடனடியாக அருகிலிருந்த செய்தியாளர்களை பார்த்து நியாயம் கேட்டுள்ளார். தான் நேரு காலத்தில் இருந்து வாக்களித்து வருவதாகவும் இதுவரை ஒரு தேர்தலை கூட தவறவிட்டதில்லை எனவும் இனமும் தன்னுடைய இறுதிக் காலத்தில் கூட தவறாமல் வாக்களிக்க வந்து விடுவதாகவும் கூறினார். அதோடு தேர்தல் அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.