கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே இருக்கும் வங்க கடலில் சென்ற சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது குறைந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருக்கின்றது. இதற்கு சிட்ரங்கு என பெயரிடப்பட்டிருக்கின்றது.
இந்த புயல் ஆனது மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று வங்காள தேச பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது.