பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் டிஆர்பி ரமேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் எம் பி ரமேஷ் சரணடைந்துள்ளார். இதேபோன்று திருநெல்வேலியில் ஞானத் திரவியம் ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பாஸ்கர் மீது கடும் தாக்குதல் நடத்தியதோடு சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கி உள்ளார்.
இதனால் இவர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில் இவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இடம் தன்னை காப்பாற்றுமாறு அடைக்கலம் புகுந்துள்ளார் என்று திருநெல்வேலி வட்டார திமுக வட்டார புள்ளிகள் கூறி வருகின்றனர். எனினும் அமைச்சரால் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது. மேலும் இது அமைச்சரின் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் உள்ளது. மேலும் அமைச்சரின் பெயரானது டெல்லி ரெய்டுக்காக குறிவைத்து இருக்கும் முக்கிய புள்ளிகளின் பட்டியலில் ஏற்கனவே இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் அமைச்சரவையில் உள்ள அவர்களின் செயல்பாடுகள் குறித்து மார்க் போட்டு வருகிறார். இதில் அமைச்சரின் மார்க் சராசரிக்கும் கீழே உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவருடைய இலாக்காக்கள் குறைக்கப்பட்டு அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என்று தகவல் வந்துள்ளது.