Categories
மாநில செய்திகள்

கடலூர் மக்களே… எப்போ வேணாலும் வரும்… கொஞ்சம் உஷாராவே இருங்க…!!!

கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பெருமாள் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதனால் கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும், பிற மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொடர் கனமழையால் கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரி, தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் ஏரியில் இருந்து 9,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் காரணமாக கரையோரத்தில் இருக்கின்ற கிராம மக்கள் அனைவருக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள 23 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |