கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளது. இந்த நடராஜர் கோவிலில் வருடம் தோறும் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை ஏராளமான பக்த கோடிகள் கண்டு களிப்பார்கள் . இந்நிலையில் இந்த வருடம் கடந்த மாதம் 27 கொடியேற்றத்துடன் ஆனி திருமஞ்சன திருவிழா தொடங்கியது.
இந்நிலையை விழாவில் சிகர நிகழ்ச்சியான திருமஞ்சன விழா இன்று நடைபெற உள்ளது. எனவே திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளித்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.