அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. அதன் பயன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கியதும் தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். பின் இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து அதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும்.
கடலை பருப்பு 1 டீஸ்பூன், ஒரு மிளகு இரண்டையும் ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பின் பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.