கடற்கரையில் உள்ளூர் மக்கள் தங்களுடைய தேவைகளுக்கு மணல் அள்ளுவதற்கு விரைவு திருத்தங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, ஒழுங்குமுறை மண்டல விதிகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. இதில் சில மாற்றங்களை செய்வதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முடிவெடுத்துள்ளது. இவற்றுக்கான வரைவு அறிக்கை தயாராகியுள்ளது. இதையடுத்து கடலோரப் பகுதிகளில் பெட்ரோலிய எண்ணெய் எரிவாயு திட்டங்களை அமல்படுத்தும் நிறுவனங்கள், கடலோர ஒழுங்குமுறை விதிகளில் முன் அனுமதி வழங்குவதில் இருந்து விலக்கு அடிக்கப்படுகிறது.
பின்னர் கடலோர பகுதிகளில் உள்ளூர் மக்கள் தங்களுடைய தேவைக்கேற்ப மணல் அள்ளுவது சிறு படகுகளை பயன்படுத்தி மணல் அள்ளுவது இதில் அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த வரைவு விதிகள் பற்றி அறிக்கையை வெளியிட்டுள்ள அரசு ஆட்சேபனை ஏதும் இருந்தால் 60 நாட்களுக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.