கடலூர் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கத்திரி வெயில் இன்று தொடங்கி மே 29ஆம் தேதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தேவையில்லாமல் வெயிலில் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.