கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய வயிற்றில் குழந்தை வளரும்போது, குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி எடுத்து கொள்வதன் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் வராது. அப்படி எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடல் கன்னி போன்று குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை “Mermaid Syndrome ” எனப்படும் அரியவகை பிறவி கோளாறால் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த 2 மணி நேரத்திற்குள் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள்.தெரிவித்துள்ளனர்.