ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் கடல் அரிப்பால் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுற்றியுள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் கடல் அலைகளின் கொந்தளிப்புடன் காட்சி அளிக்கின்றன.
பாம்பன் பகுதிகள் கரையோரங்களில் உள்ள குடிசை வீடுகள் மீன் கம்பெனிகள் தற்போது பலத்த கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 135 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3500 பேரிடர் மீட்புப் பணியாளர்கள் 24 மணிநேரமும் விழிப்புடன் உள்ளனர் என்றும் பொது மக்களுக்கு அவசரகால அழைப்பு தேவைப்பட்டால் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.