தேசிய கடல்சார்தேடுதல் மற்றும் மீட்பு தினத்தை முன்னிட்டு கடலில் சிக்கிதவிப்பர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியானது சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக நடந்தது. அப்போது கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள்..? என்பதை கடலோர காவல்படையினர் ஒத்திகை வாயிலாக கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் செய்துகாண்பித்தனர்.
இந்நிலையில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் உயரத்தில் பறந்தது. அந்த ஹெலிகாப்டரிலிருந்த கடலோர காவல்படைவீரர் ஒரு கூண்டு வாயிலாக கடல் பகுதிக்குள் மெதுவாக இறக்கப்பட்டார். பின் அவர் கடலில் சிக்கி தவிப்பர்களை மீட்டு அந்த கூண்டில் ஏற்றி மீட்பது போன்று ஒத்திகை நடைபெற்றது. இதை கடற்கரையில் கூடியிருந்த பெரும்பாலான பொதுமக்கள் பார்த்தனர்