விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கின்ற திக்கவாணி பாலம் கடற்கரையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது பலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அதனை கண்டவர்கள் சிறுமிகளை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த சிறுமிகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.