மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ரஞ்சன் பேடிங் மற்றும் சபித்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதனிடையே ரஞ்சன் தனது வீட்டிற்கு கடல் ஆமையை கொண்டு வந்துள்ளார். ஆமை இறைச்சியை தனது மனைவியை சமைக்க சொன்னார்.ஆனால் கறி சமைக்கும் போது சிறிது கருகிப்போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சன் தனது மனைவியை கொடூரமாக தாக்கி விட்டு மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு அதிர்ச்சி அடைந்தார்.
மனைவியின் உடலை வீட்டுக்கு கொள்ளை புறத்தில் புதைத்த பின்னர், அவர் தனது மனைவியை காணவில்லை என மக்களிடம் கூறி நாடகம் ஆடினார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.