Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் ஆமையை பாதுகாக்க ரூ2,00,00,000 ஒதுக்கீடு…….. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு….!!

நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தில் கடலாமை பாதுகாப்பு மையம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடல் ஆமை மற்றும் கடல் சார்ந்த  அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க பாதுகாப்பு மையம் அமைக்க ரூ 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,கடல் ஆமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகத் தரம் வாய்ந்த முப்பரிமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும்  அது சூரிய மின் சக்தியை கொண்டு இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |