Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கடல் கடந்த காதல்” நைஜீரிய பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

வாலிபர் ஒருவர் பெற்றோர் சம்மதத்துடன் நைஜீரிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவில் சுப்பிரமணி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமால் பிரசாத்(28) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஜெர்மனி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே நைஜீரியாவில் வேலை பார்த்த போது திருமால் பிரசாத் பட்ரிசியா இய்ன்வாஎசா(25) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி அல்லிகுளத்தில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் திருமால் பிரசாத் தனது காதலியை இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து காதல் தம்பதியினர் வாலாஜா பத்திரபதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |